வெற்றிப்படிகள் இந்தியா பிரைவேட் லிமிட்டெட்

வெற்றிப்படிகள் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனமானது கல்வி, வேலைவாய்ப்பு, போட்டித்தேர்வு குறித்த பயிற்சியைத் தமிழகம் முழுவதுமுள்ள மாணவர்களுக்குக் கொண்டு சேர்க்கும் நிறுவனமாகும்.

இந்த நிறுவனத்தின்கீழ் ஜாப்ஸ் இன் தமிழ் இணையதளம், அறம் இணையதளம், ஜே.ஐ.டி. கிளாஸஸ் இணையதளம், கூட்டுப்பொரியல் இணையதளம் உள்ளிட்டவை டிஜிட்டல் முறையில் இயங்கிவருகிறது.

இதில் முதல்கட்டமாக டிசம்பர் முதல் தேதியிலிருந்து வெற்றிப்படிகள் இந்தியா பிரைவேட் லிமிடெட் சார்பில் அறம் கல்வி மாத இதழ் தமிழகம் முழுவதும் முதல் முறையாக வெளிவரவிருக்கிறது. பள்ளி மாணவர்களுக்காகச் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த இதழ் ஒரு புதுமையான முயற்சியாகும்.

இதழ் வெளிவரும் அதே நாளில் டிஜிட்டல் மேகசீன், அப்ளிகேஷன், ஆடியோ மேகசீன் வெளியிடும் தமிழகத்தின் ஒரே இதழ் அறம் என்பதைச் சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்கிறோம். பள்ளி மாணவர்களுக்காகச் சிறப்பாக அறம் இதழ் வருவதைப் போல வெகுவிரைவில் கல்லூரி மாணவர்களுக்காகவும், வேலை தேடுனர்களுக்காகவும் மாபெரும் ஓர் இதழ் வெளிவரத் தயாராகிக்கொண்டிருக்கிறது.

இவற்றோடு மாணவர்களுக்கான ஆன்லைன் டியூஷன், நீட், ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வுக்கான வகுப்புகள், ஸ்போக்கன் இங்கிலீஷ், ஸ்போக்கன் ஹிந்தி வகுப்புகள், ரோபோட்டிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆன்லைன் வகுப்புகளையும் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

1 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஆரம்பித்து, வேலை தேடும் இளைஞர்கள் வரை எல்லாத்தரப்பினரும் பயன்படும் வகையில் பல்வேறு பயிற்சி வகுப்புகள், உபகரணங்கள், இதழ்கள், அப்ளிகேஷன், இணையதளங்கள் ஆகியவற்றை உருவாக்கி மாணவர்களின் வளர்ச்சிக்கு ஏணியாக இருப்பதே வெற்றிப்படிகள் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முக்கிய நோக்கம்.